snap

Friday, March 24, 2006

உங்களுக்கு ஏன் நோய் வரப்போகிறது? நிச்சயம் இல்லை

மனிதனாக வாழ்வதே நோய் நொடியில்லாமல் வாழ்வது தான். அதில் தான் எத்தனை பிரச்சனைகள். நாற்பது வயது தாண்டியதும் பல வியாதிகள் தானாக வந்து விடுகின்றன. நாற்பது வயது தாண்டிய ஒருவர் மருத்துவரிடம் தன்னை பரிசோதித்து கொண்டார் என்றால் மருத்துவர் ஏதேனும் ஒன்றோ அல்லது பல நோய்கள் உள்ளது என்றுதான் சொல்வார். அந்தளவிற்க்கு வியாதி பரவ காரணம் என்ன? மனிதன் உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் மாற்றம் இதுதான் காரணம். பழையகால மனிதர்கள் தங்கள் விளைச்சல் நிலங்களுக்கு உரமாக இயற்க்கை உரங்களையே இட்டார்கள். ஆனால் தற்போது ராசயான உரங்களைத்தான் இடுகின்றார்கள். இந்த ராசயான உரங்களிலுள்ள மூலக்கூருகள் மனிதனுடைய பல வளர்ச்சியினை பாதித்து அவனுடைய முதுமைபருவத்தில் பல நோய்களை விருத்திச்செய்கின்றது. இந்த ராசயான உரங்களைப்பயன்படுத்துவது இப்போது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆகவே ராசயான உரங்களின் பக்கவிளைவுகளை ஆராய்ந்து அதன் பின் பக்கவிளைவு இல்லாத உரங்களை பயன்படுத்துவது நல்லது.

மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றத்தினை கொண்டுவர வேண்டும். நாள் ஒன்றிற்க்கு ஒருவர் பத்து லிட்டர் கொதிக்கவைத்து ஆற வைத்த நீரை அருந்த வேண்டும். பழைய பண்டங்களை உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

மேற்கூறிய காரணங்களை பின்பற்றினால் உங்களுக்கு ஏன் நோய் வரப்போகிறது? நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.

1 comment:

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

பயனுள்ள கட்டுரை. வாழ்த்துகள்.