snap

Monday, May 22, 2006

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைந்தது. 1570 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 421 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் 5 லட்சத்து 27 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 42 ஆயிரத்து 946 மாணவ- மாணவிகள் 133 தேர்வு மையங்களில் பரீட்சை எழுதினார்கள். புதிய பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு நடந்த முதல் தேர்வு இதுவாகும்.
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை 9-30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இயக்குனரக அலுவலகத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குனர் ஜெகநாதன் வெளியிடுகிறார்.

அதே நேரத்தில் மாணவர்கள் படித்த பள்ளியில் தேர்வு முடிவு மற்றும் மார்க்கு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் .மேலும் இணையதளங்களிலும் செல்போனில் எஸ்.எம்.எஸ் மூலமும் தெரிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணைய தள முகவரிகள் வருமாறு:-

மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் பிளஸ்-2 மார்க் பட்டியலை பெற தினத்தந்தி சிறப்பு ஏற்பாடு செய்து உள்ளது. ஈபஏ என்று டைப் செய்து பிளஸ்-2 தேர்வு எண்ணையும் டைப் செய்து 7333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். சில வினாடிகளில் உங்கள் மொபைல் போனில் மார்க் பட்டியல் தெரியும். எடுத்துக்காட்டாக பிளஸ்-2 ரிஜிஸ்தர் நம்பர் 123456 என்று வைத்துக்கொள்வோம்.

ஈபஏ 123456 என்று டைப் செய்து 7333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு டெலிகாம் சர்க்கிள் மக்கள் தொடர்பு அதிகாரி கே.ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எம்.எஸ். சேவை மூலம் தெரிந்து கொள்வதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் செல்போனில் எச் எஸ் சி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து அத்துடன் தேர்வு எண்ணையும் பதிவு செய்து 3333 என்ற எண்ணுக்கு அனுப்பி பிளஸ்-2 முடிவை தெரிந்து கொள்ளலாம்.
போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 80 காசும், பிரிபெய்டுதாரர்களுக்கு ஒரு ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவையை சென்னை டெலிபோன் வாடிக்கையாளர்களும் பயன் அடையலாம் என்று சென்னை டெலிபோன் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் செல்போனில் 1234 டயல் செய்தால் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

No comments: