snap

Thursday, May 11, 2006

முடிவை மாற்றிய விஜயகாந்த்


விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட் சியை தொடங்கி 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டார். விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிட்டு 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசலத்தில் வெற்றி பெற்றார்.

அவருடைய கட்சி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் அதிக ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து உள்ளது. அவரது கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே அமைந்து விட்டது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. 30 ஆயிரத்து 96 ஓட்டுகளை பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் 70 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு 52 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி பெற்ற 30 ஆயிரம் ஓட்டுகள் விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைத்திருந்தால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.

தாம்பரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மொத்தம் 89 ஆயிரம் ஓட்டு பெற்றார். ம.தி.மு.க.வுக்கு 73 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. இந்த தொகுதியில் தே.மு.தி.க. 15 ஆயிரத்து 750 ஓட்டுகள் பெற்றுள்ளது. இந்த ஓட்டு கிடைத்திருந்தால் ம.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். அச்சரபாக்கத்தில் தே.மு.தி.க. 10 ஆயிரத்து 500 ஓட்டுகளும், காஞ்சீபுரத்தில் 15 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றுள்ளது.

இது போல தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க. அதிக அளவில் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. ஓட்டுகள் பிரித்ததால் பல தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும், சில தொகுதிகளில் தி.மு.க. கூட் டணி கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.

மொத்தத்தில் விஜயகாந்த் கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
- நன்றி மாலைமலர்

No comments: