snap

Tuesday, May 23, 2006

முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதம்

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கடித்தத்தில் கூறி இருப்பதாவது:-

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எ.ஐ.எம்.எஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) அவசியம் என்பது தமிழகத்தின் அனைத்து மக்களின் நீண்ட கால குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கை ஆகும்.

மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் அல்லது நிதி உதவி அளிக்கப்படும் இந்த கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து தமிழக மக்களின் இதற்கான எதிர்பார்ப்பு பன் மடங்காக அதிகரித்து உள்ளது.
கீழ்மட்டத்தில் உள்ள வகுப்பினரின் எதிர்காலம் மத்திய அரசின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைப்படி அமைந்து இருப்பதால், இதை எந்தவித காலதாமதம் இன்றியும், தள்ளிப்போடுதல் இன்றியும் உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இட ஒதுக்கீட்டை அமல் படுத்து வதற்காக அவசர சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்பது எனது கருத்தாகும்.
எனது வேண்டுதலின் அடிப்படையில் இது தொடர்பாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் மத்திய அரசுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

3 comments:

தயா said...

களத்தில் தீவிரமாக இருக்கும் பாமகவும் ராமதாசும் எங்கே பெயர் தட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என கடிதம் எழுதியிருக்கிறார்.

Vaa.Manikandan said...

வாழ்க கலைஞர்...வேறு என்ன சொல்ல?

ஜோ/Joe said...

//களத்தில் தீவிரமாக இருக்கும் பாமகவும் ராமதாசும் எங்கே பெயர் தட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என கடிதம் எழுதியிருக்கிறார்.//
பாட்டெழுதி பேர் வாங்குகிற புலவர்களும் இருக்கிறார்கள் .குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குகிற புலவர்களும் இருக்கிறார்கள் .இதில் நீர் இரண்டாவது வகை போல் இருக்கிறது.