snap

Monday, May 29, 2006

இந்தோனேஷியாவுக்கு இந்தியா உதவிக்கரம்

இந்தோனேஷியா நாட்டில் ஜாவா தீவில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் உலகத்தையே உலுக்கி உள்ளது.
இந்நிலையில் இந்தோனேஷியாவுக்கு உதவ இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதை மத்திய ராணுவ மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து அவர் இந்தோனேஷிய ராணுவ மந்திரி ஜீவனோ சுதர்சனோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்டு ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இந்திய மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தோனேஷியாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும், ஒத்துழைப்பும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
இதற்கிடையே, இந்தோனேஷியாவில் பூகம்பத்தால் பலியானவர்களின் குடும்பத்துக்கு பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தோனேஷிய பாராளுமன்ற சபாநாயகருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி உள்ளார்.
- நன்றி : மாலைமலர்

No comments: